தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் பகுதிகளில் தொடர் மழை..!!

    -MMH 

     ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான புதியம்புத்தூர், குறுக்குசாலை, புளியம்பட்டி, சில்லாநத்தம், நயினர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த  5 நாட்களாக தொடர்ந்து  இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

இந்த கனமழையால் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சற்று ஆறுதல். கோடை காலத்தில் பெய்த மழையால் பூமியின் நீர்மட்டம் உயர்வு, ஆடு, மாடு, கோழி மற்றும் கால்நடைகள் வளர்த்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

குறிப்பாக இந்த ஆடி மாதத்தில் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி குறைந்த பட்சமாக 26 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது .

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-முனியசாமி.

Comments