வேலூரில் குற்ற சம்பவங்களை தடுக்க 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை!

 

-MMH

   வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கால்வாய் அமைக்கும் பணிகளையும் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்,மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி மற்றும் வட்டாட்சியர் செந்தில் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் கூறும்போது:-

வேலூர் மாநகராட்சி பகுதியில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. கால்வாயின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் கால்வாய்களில் குப்பை கழிவுகளை கொட்ட கூடாது, என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதுடன்,இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் கால்வாய்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை இதுபோல் ஆய்வு நடத்தப்படும் பொது மக்கள் யாரும் கால்வாய்களில் குப்பைகளை கொட்ட கூடாது கால்வாய் மட்டுமல்ல குடியிருப்புகள் வீதிகள் என எங்குமே குப்பைகளை கொட்ட கூடாது வேலூர் மாநகராட்சி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க கூடுதலாக 650 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்திலுள்ள பாலாற்று பகுதியில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது அதற்கு ஏற்றார்போல ஏற்கனவே ஒரு குற்ற சம்பவம் நடந்துள்ளது இதை கருத்தில் கொண்டு ஆற்றுப் பகுதியில் 15 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும்போது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது சிமெண்ட் சாலை மற்றும் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளன அந்த பகுதியில் சாலையைத் தோண்டி புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை அப்புறப்படுத்தாமல் சாலையை போட்ட ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் சாலை அமைக்கும் பகுதியில் ஒரு நாள் முன்னதாக அந்த தெருவில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

வேலூர் மாநகராட்சியில் பகுதி இரண்டில் காரணங்களுக்காக சில இடங்களில் சாலை அமைக்கும் பணி தாமதமாகிறது வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் அடுத்த இரண்டு மாதங்களில் அனைத்து சாலைகளும் போடப்படும் கடந்த ஆண்டு அதிக அளவில் நீர்வரத்து இருந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. சேண்பாக்கம்,கன்சால்பேட்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெறும் என்றார். 

-P. இரமேஷ் வேலூர்.

Comments