உலகை அச்சுறுத்தும் மார்பர்க் வைரஸ்! கானா நாட்டில் கண்டுபிடிப்பு! இறப்பு விகிதம் 88% வரை இருக்கலாம்!!

    -MMH 

அக்ரா: வெளவால்களிடமிருந்து புது வைரஸான மார்பர்க் , வேகமாக பரவி வருவதால், ஆப்பிரிக்கா நாட்டு சுகாதாரத்துறை முக்கிய வேண்டுகோள் ஒன்றை அந்நாட்டு மக்களுக்கு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸிடமிருந்தே இன்னும் உலக நாடுகள் மீள முடியாமல் சிக்கி கொண்டிருக்கும்போது, அடுத்தடுத்த புது வைரஸ்கள் மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன.

அந்த வகையில், கடந்த சில மாதங்களாக குரங்கு அம்மை வைரஸ் பரவி கலக்கத்தை தந்தது.. இப்போது மார்பர்க் வைரஸ் (Marburg Virus) என்ற புது வைரஸ் கிளம்பி உள்ளது. ஆப்பிரிக்க நாடான கானாவில் இரண்டு நபர்களுக்கு இந்த வைரஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. ஒருவருக்கு 26 வயது, இன்னொவருக்கு வயது 51.. இதனால், இவர்களுடன் தொடர்பில் இருந்து 90-க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர், ஆனால், அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று கூறப்படுகின்றன. இந்த மார்பர்க் வைரஸ் என்பது, எபோலா வைரஸின் குடும்பத்தை சேர்ந்தது என்கிறார்கள்.

எபோலா பாதித்தால் காய்ச்சல், வாந்தி, ரத்தப்போக்கு, வயிற்றோட்டம் வருவதுபோலவே, இந்த புது வைரஸுக்கும் அதேபோல அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஆனால், மூக்கு மற்றும் பிறப்புறுப்புகளில் ரத்தம் வருதல் ஆகியவை இந்த வைரஸின் தீவிர அறிகுறிகளாகும்... மேலும் நோயாளிகளின் தோற்றம் கண்கள் ஆழமாக புதைந்தது போல் இருப்பது வெளிப்பாடற்ற முகங்கள் மற்றும் தீவிர சோம்பல் போன்றவையும் சொல்லப்படுகிறது.. எனவே, இதுவும் உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸ்தான்.

RT-PCR டெஸ்ட் செய்து கொள்வதன் மூலம் இந்த நோயை கண்டறியலாம் என்கிறார்கள்.. ஆனால், இந்த மார்பர்க் வைரஸுக்கு தடுப்பூசி கிடையாது.. இந்த மார்பர்க் வைரஸிலிருந்து மீண்டவர்கள் மூலமும் மார்பார்க் வைரஸ் பரவும் என்பதால் சுமார் ஒரு வருடத்திற்கு மார்பர்க் வைரஸ் பாதித்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். மார்பர்க் வைரஸ் பழந்தின்னி வெளவால்களிடமிருந்து விலங்குகளுக்கும், பின்னர் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது. மார்பர்க் தாக்கப்பட்டு ஒருவர் இறந்துவிட்டால் இறந்த அவர் உடல் மூலமும் இவை பரவும்.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில், "கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.. அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தது.. இந்த வைரஸ் தொற்று உறுதியானால், மேற்கு ஆப்பிரிக்காவில் மார்க்பர்க் வைரசால் பாதிக்கப்பட்ட 2வது பாதிப்பு பொதுவாக இருக்கும்... 1967 முதல் இதுவரை 12 முறை கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இந்த வைரஸ் பரவியுள்ளது.. இதன் இறப்பு விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 88 சதவீதமாக வைரஸின் தீவிர தன்மையைப் பொறுத்து மாறியுள்ளது.

இந்நிலையில், கானா மக்களுக்கு அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதில், மார்பர்க் வைரஸ் தொற்றுக்குள்ளான வெளவால் போன்ற விலங்குகள் மூலம், மனிதர்களுக்கும் இதன் தொற்று ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.. தொற்றுக்குள்ளான மனிதரிடமிருந்து இன்னொருத்தருக்கு இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டது.. வெளவால்கள் வசிக்கும் குகைகள் போன்ற பகுதிகள் அருகில் செல்ல வேண்டாம், அசைவ உணவுகளை நன்கு சமைத்து உண்ண வேண்டும்" என்று கானா நாட்டு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

-செந்தில் முருகன், சென்னை தெற்கு.

Comments