திருச்செங்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!! அதிகாரிகள் எச்சரிக்கை!!

திருச்செங்கோடு நகராட்சி வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன், உதவி பொறியாளர்கள் கிருஷ்ணன், சந்தானகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் சண்முகம், துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், ஆய்வாளர்கள் குமரவேல், ஜான் ஆகியோர் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 32 கிலோ பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவை இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதை வைத்திருந்த கடைக்காரர்களுக்கு ரூ. 3 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர். அதிகாரிகள் ஆய்வின் போது அங்கு சென்ற திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ் பாபு, கவுன்சிலர்கள் அசோக்குமார், செல்வி ராஜவேல் ஆகியோர் உடன் சென்றனர். 

அப்போது கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம், துணி பைகளையே பயன்படுத்துங்கள், காகித கவர்களில் பொருள்களை கொடுங்கள் என கடைக்காரர்களிடம் கூறினார்கள். மேலும் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் மஞ்சள் பைகளையே பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தியதோடு பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மஞ்சள் பை பயன் படுத்துவதால் மாசு ஏற்படாது என்பது குறித்தும் எடுத்துகூறினார்கள்

நாளைய வரலாறு செய்திக்காக,

-ரஞ்சித் குமார், திருச்செங்கோடு.

Comments