தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக அதிகரித்து பதிவாகி வருகிறது!!

 

 -MMH 

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,385 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 2,533 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,158 இருந்து 13,319 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,372 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,059 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 1,025 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. செங்கல்பட்டில்-393 பேருக்கும், கோவை-117, குமரி-88, திருவள்ளூர்-142, காஞ்சிபுரம்-87, திருச்சி-72 பேருக்கு என கரோனா பதிவாகியுள்ளது.

-வேல்முருகன், சென்னை.

Comments