கோவையில் ஜப்பான் தொழில் துறையினர்களுடனான கலந்துரையாடல்!!

 -MMH 

ஜப்பான் நாட்டில் விவசாயம்,ஆயுஷ் மற்றும் தொழில் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக கோவையில் ஜப்பான் மற்றும் கோவை சார்ந்த தொழில் துறையினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

ஜப்பான் நாட்டில் குறைந்து வரும் மக்கள் தொகையால் ஜப்பானில் தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் விதமாக கோவை சார்ந்த தொழில் நிறுவனங்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை சீமா அரங்கில் நடைபெற்றது.

இதில் ஜப்பான் நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவரும் கே.இ.சி.சி.நிறுவன அமைப்பின் தலைவருமான கருணாநிதி காசிநாதன் தலைமையில் நடைபெற்ற இதில்,ஜப்பான் நாட்டை சேர்ந்த நோவா மற்றும் மாரிக்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கோவையை சேர்ந்த விவசாயம்,ஆயுஷ்,மற்றும் இண்டஸ்ட்ரியல் என பல்வேறு துறை சார்ந்த தொழில் அமைப்பினர் கலந்து கொண்டனர்.இதில் பேசிய கருணாநிதி காசிநாதன் டோக்கியோ தமிழ் சங்கத்துடன் இணைந்து இந்தோ ஜப்பான் ஒப்பந்தம் வாயிலாக கோவையை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொழில் துறையினருக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை ஜப்பானில் வழங்கும் விதமாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுவதாகவும்,குறிப்பாக அனைத்து துறைகளிலும் ஜப்பானிய நாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதால், ஜப்பானிய  மொழியை கற்று கொள்ளும் இளைஞர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

எனவே தற்போது ஜப்பான் நாட்டில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளும் விதமாக இளைஞர்கள் மற்றும் தொழில் துறையினர் முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்..இதற்கான முதல் முயற்சியை தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான கோவையில் துவங்கி உள்ளதாக கூறிய அவர்,இதனால் ஜப்பான் மற்றும் கோவை இடையே தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments