கோவையில் வாட்சப் வாயிலாக புக்கிங் செய்யும் வகையில் ஆட்டோ பயண சேவை திட்டம்!!

   -MMH 

     இந்தியாவில் முதன் முறையாக கோவையில்  வாட்சப் வாயிலாக புக்கிங் செய்யும் வகையில் ஆட்டோ பயண சேவை திட்டம்.

பெருகி வரும் மக்கள் தொகையில் தற்போது பொதுமக்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை விட வாடகை வாகனங்களில் பயணம் செய்வதை அதிகம் விரும்பி வருகின்றனர்.இதற்கான செயலிகள் அதிகம் உள்ள நிலையில்,வாட்சப் மூலமாக எளிதாக புக்கிங் செய்து பயணம் செய்யும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக ஊர் கேப்ஸ் (OOR Cabs) எனும் புதிய பயண சேவை திட்டத்தை கோவையில் அறிமுகம் செய்துள்ளனர்.இதற்கான துவக்க விழா கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.ஊர் கேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மரிய ஆண்டணி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற காவல் துறை கூடுதல் ஆணையர் மகுடபதி கலந்து கொண்டு சேவையை துவக்கி வைத்தார்.புதிய பயண சேவை திட்டம் குறித்து ஊர் கேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மரிய ஆண்டணி கூறுகையில்,இந்தியாவிலேயே முதன் முறையாக வாட்சப் செயலி மூலமாக புக்கிங் செய்யும் வகையில் இந்த பயண சேவை திட்டத்தை துவக்கி உள்ளதாகவும்,முதல் கட்டமாக ஆட்டோ சேவையை கோவையில் துவக்கி உள்ளதாக குறிப்பிட்ட அவர்,இதில் அனைத்து வாகனங்களையும்,இணைத்து விரைவில் இந்தியா முழுவதும் இந்த சேவை திட்டத்தை தொடர உள்ளதாக தெரிவித்தார். தற்போது பெரும்பாலான மக்கள் வாட்சப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் ஊர் கேப்ஸ் வாட்சப்பில் இணைய 8098480980 என்ற வாட்சப் எண்ணில் இணைவதன் மூலம் எந்த இடத்திலிந்து வேண்டுமானாலும் இந்த ஆட்டோ பயண சேவையை எளிதாக பெற முடியும் என அவர் தெரிவித்தார். முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் கேப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லாரன்ஸ் அடைக்கலம்,HTC குளோபல் சர்வீஸ் இயக்குனர் செசில் பீட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

- சீனி,போத்தனூர்.

Comments