பொள்ளாச்சியில் தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைத்திட கோரிக்கை...!!!

 

    -MMH 

       இந்திய மண்ணில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய சாதி, தீண்டாமை, வன்கொடுமை, பாலின பாகுபாடு, கல்வி, வேலை வாய்ப்பு, உரிமைகள் மறுப்பு, போன்றவற்றை உடைத்து எறிந்து அனைவரும் சமத்துவமாக வாழ வேண்டும் என்று தங்கள் உயிருள்ளவரை போராடி உரிமைகளை மீட்டுக் கொடுத்தும், அதனை சட்ட வடிவமாக்கி கொடுத்த சமூக நீதி தலைவர்கள் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் முழு திருவுருவச் சிலையை நிறைவிட பொள்ளாச்சி பகுதி அனைத்து சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பாக கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

தீர்வு கிடைக்காமல் இருந்திருந்த தந்தை பெரியார், அம்பேத்கார் திருவுருவ சிலையை பொள்ளாச்சி நகரத்தின் மையப் பகுதியில் அரசு சார்பில் இட ஒதுக்கி சிலை அமைத்துக் கொடுக்கும்படி பொள்ளாச்சி சார் ஆட்சி தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர், மற்றும் பொள்ளாச்சி நகர தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரை பெரியார் அம்பேத்கர் சிலை அமைப்பு குழுவினர் சிலை அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் க. வீ. மணிமாறன் தலைமையில் மனு அளித்தனர். உடன்  மதிமுக நகர செயலாளர் தோழர்.துரைபாய்,விசிக மாவட்ட செயலாளர் தோழர்.ச.பிரபு,ஆதித்தமிழர் பேரவை மாநில குழு உறுப்பினர் தோழர்.தி.செ.கோபால்,வானுகன்,திவிக மாவட்ட செயலாளர் தோழர்.யாழ் வெள்ளிங்கிரி,திராவிடர் கழகம் தோழர்.வீரமலை,அஇமுதோழர். மதி அம்பேத்கர், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments