மீண்டும் ஷீரடிக்கு தனியார் ரயில் இயக்கம்!!

   -MMH 

    ஆக., 5ல் இருந்து மீண்டும் ஷீரடிக்கு தனியார் ரயில் இயக்கம்.

கோவையில் இருந்து ஷீரடிக்கு மீண்டும் தனியார் ரயில் ஆக.,5ல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. 

மத்திய அரசின் 'பாரத் கவுரவ்' திட்டத்தின் கீழ், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் ரயில் இயக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது. கடந்த, ஜூன் 13ம் தேதி நாட்டிலேயே முதன் முறையாக, கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஆந்திரா, மந்த்ராலயம் வழியாக ஷீரடிக்கு, தனியார் ரயில் 'சவுத் ஸ்டார்' என்ற நிறுவனம் வாயிலாக இயக்கப்பட்டது.பயணிகள் வரவேற்பை தொடர்ந்து, மீண்டும் ஆக., 5ம் தேதி கோவையில் இருந்து ஷீரடி ரயில் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு www.southstarrail.com என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு, 1800 210 2991 என்ற எண்ணில் அழைக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு..

Comments