ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி!!

    -MMH 

கோவை மாவட்டம் ஆனைமலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் கொப்பரை ஏலம் ஜூலை 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு ஆனைமலை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 61 விவசாயிகள் மொத்தம் 277 தேங்காய் கொப்பரை மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் 146 தேங்காய் கொப்பரை மூட்டைகள் கிலோவிற்கு 73 ரூபாய் முதல் 81 ரூபாய் 25 பைசா வரையிலும், இரண்டாம் தரம் 131 தேங்காய் கொப்பரை மூட்டைகள் கிலோவிற்கு 62 ரூபாய் முதல் 70 ரூபாய் 10 பைசா வரையிலும், ஏலம் நடைபெற்றது. 

இந்த தேங்காய் கொப்பரை ஏலத்திற்கு 7 வியாபாரிகள் கலந்து கொண்டனர் என ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் அவர்கள் தகவல் தெரிவித்தார். மேலும் இந்த கொப்பரை ஏலத்தில் கடந்தவார விலையை விட இந்த வாரத்தில் கொப்பரை கிலோவிற்கு 50 பைசா விலை உயர்ந்துள்ளது. எனவே இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Comments