அதிமுக அலுவலகத்தில் தள்ளுமுள்ளு தகராறு!!

    -MMH 

     இன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆதரித்து அவரின் அனைத்து ஆதரவாளரும் வானகரத்தில் 2400 பொதுக்குழு உறுப்பினர்களுடன் கட்சியின் சட்ட திருத்தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இருக்கின்றது.

ஒருபுறம் ஓபிஎஸ் அவர்கள் தன்னுடைய ஆதரவாருடன் கிரீன்வேஸ் சாலையிலிருந்து தலைமை அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் ஆனால் அங்கு அதிமுக அலுவலகம் பூடப்பட்டு இருக்கும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு கைகலப்பு வாக்குவாதம்.

இன்று ஓபிஎஸ் அவர்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வர இருக்கும் வேளையில் ஓபிஎஸ் அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் அம்மாவின் படத்திற்கும் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து பின்னர் அவரின் இருப்பிடத்திற்கு சென்று அமர்ந்திருக்கிறார்.

காலையிலிருந்து இன்னும் பரபரப்பான சூழல் அதிமுகவில் உள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அடி உதை இருவர் காயமடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா.

Comments