மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

 

     -MMH 

    சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். நூக்கம்பாளையம் மேம்பாலம், அரசன் கழனி ஏரி உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு நடத்தினார். மதுரப்பாக்கம் ஓடை, தெற்கு டிஎல்எப் இடங்களில் நடக்கும் பணிகளும் ஆய்வு செய்யப்படவுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-வேல்முருகன் சென்னை.

Comments