தொண்டாமுத்தூர் அரசு பள்ளி!! சாதனை மாணவிகள் நிவேதா, அட்சயதேவிக்கு பாராட்டு விழா!!

 -MMH 

தொண்டாமுத்தூர் அரசு மகளிர் பள்ளி மாணவிகளை விடுதலைப்போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி சங்கம் பாராட்டியது. மத்திய அரசால் கல்வி உதவித்தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வில் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நிவேதா, அட்சயதேவி பங்கேற்றனர். இதையடுத்து போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் நிவேதா, அட்சயதேவி பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது. 

இந்நிகழ்வில், மாணவிகளையும் ஆசிரியர்களையும் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாலா மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் சிவக்குமார், செயலாளர் ஷைனி சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் வெகுவாக பாராட்டினர். 

அப்போது, போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளை மேம்படுத்தி இன்னும் சிறப்பான முறையில் மாணவர்களை பயிற்றுவிக்கப்படும்  எனவும், அதிக அளவில் இந்த பள்ளியில் இருந்து மாணவர்களை வெற்றி பெறச் செய்யப்படும் எனவும் தலைமையாசியர் மாலா குறிப்பிட்டார். 

மேலும் அரசு பள்ளியில் படித்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் மாலா ஆகியோர் கடின உழைப்பு, பயிற்சி காரணமாக சாதனை படைத்த மாணவிகள் நிவேதா, அட்சய தேவி ஆகிய இருவருக்கும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பாராட்டு குவிந்து வருகிறது. 

-செய்திப் புயல்.

Comments