வெளிமாநிலத்திற்குக் கடத்த முயன்ற ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்!! கடத்தலில் ஈடுபட்டவர் கைது...!!!

 -MMH 

கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட ஆழியார் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் ஜூலை 16ஆம் தேதி இரவு ரெட்டியார் ஊர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த TATA SOMU வண்டியை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் அந்த வண்டியில் 60 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. எனவே கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்து பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்புப் பிரிவுபோலீசாரிடம் ஒப்படைத்தனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Comments