ஏழ்மையிலும் நேர்மை!!

 

     -MMH 

   கோவை சிவராம் நகர் அருகில் உள்ள விநாயகபுரம் பகுதியில் விஷ்ணு சலூன் கடை நடத்தி வரும் கிருஷ்ணசாமி தனது குடும்பத்துடன் அவிநாசி கல்யாணத்திற்காக சென்று கொண்டிருந்த போது பேருந்தில் தவறுதலாக கிடைத்த கைப்பையை திறந்து பார்த்த போது பணம் மற்றும் நகை இருந்தது. அதை உரியவர்களிடம் சேர்க்க பெரும் முயற்சி மேற்கொண்டிருந்தார். ஏன் எனில் அந்த பையில் முகவரி மற்றும் தொலைபேசி எண்  எதுவும் இல்லாத சூழலில் அவருடைய நீண்ட நாள் வடிகையாளரும்  மக்கள் விழிப்புணர்வு அமைப்பின் உறுப்பினருமான த.சுரேந்திரக்குமாரிடம் இது குறித்து தெரிவித்தார். அப்போது அந்த பையில் உள்ள புத்தகத்தை பார்த்த போது அது கோவை பீளமேட்டில் உள்ள பிரபல தனியார் கல்லுரி நூலகத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதை அடுத்து அக்கல்லூரியில் உதவி பேரசிரியராக பணிபுரியும் தனது தோழி திருமதி உமா அவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தார். அவர் உடனே சம்பத்தப்பட்ட துறை சார்ந்தவர்களிடம் விசாரிக்க, அந்த பெண் கல்லூரி விடுதியில் தங்கி படிப்பதும் ஊருக்கு பேருந்தில்  செல்லும் பொழுது தன் கைப்பையை தவற விட்டதும் தெரிய வந்தது. நேற்று அந்த பெண் அவரது தந்தையுடன் நேரில் வந்து தொலைந்த தனது பொருட்கள் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீருடன் பெற்றுக்கொண்டார்.  

ஏழ்மை நிலையிலும் நேர்மையாக பொருட்களை உரியவர்களிடம் சேர்த்த  கிருஷ்ணசாமிக்கும் உதவி புரிந்த சுரேந்திரக்குமாருக்கும்  பொதுமக்கள்  பாராட்டு தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-த.சுரேந்திரக்குமார், கோவை கவுண்டம்பாளையம்.

Comments