திரளானோர்மமகவில் இருந்து விலகி மஜகவில் இணைந்தனர்!!

    -MMH 

    கோவை மாநகர் மாவட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த திரளானோர் அக்கட்சியில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியில் இணையும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக துணை பொதுச்செயலாளர் AK.சுல்தான் அமீர்,  மாநில செயலாளர் MH.ஜாபர் அலி  ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் மத்திய பகுதி பொறுப்பாளர் இப்ராஹிம், அவர்கள் தலைமையில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த சகோ மைதீன், திருப்பூர் மங்கலம் அப்தர்ரஹீம்  மற்றும் பல்வேறு சகோதரர்கள் மாநில நிர்வாகிகள் முன்னிலையில்  தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், HM ஹனீப், ஜாபர் சாதிக், மற்றும் மாவட்ட, பகுதி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments