திக் திக் அனுபவம்! யானையே ஆசிர்வதித்து அனுப்பிய அதிசயம்!!

 

-MMH

 வால்பாறை அருகே, யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக ஒருவர் தப்பிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் சாலக்குடி, அதிரப்பள்ளி கொரட்டி பகுதியை சேர்ந்தவர் டாட்சன். 40. இவர், வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை சென்றார். வளைவான பகுதியில் சென்றபோது, யானை எதிரே வந்தது. பைக்கை உடனடியாக திருப்ப முடியாமலும், அங்கிருந்து ஓடவும் முடியாமலும், எவ்வித அசைவும் இன்றி, பைக்குடன் அப்படியே அமர்ந்து விட்டார். அப்போது, டாட்சனின் தலையை துதிக்கையால் தொட்டு விட்டு, வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தை, பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். டாட்சன் கூறுகையில், ''பைக்கை திரும்பி இருந்தாலோ, இறங்கி ஓடியிருந்தாலோ யானை என்னை தாக்கியிருக்கும். யானையின் குணம் அறிந்து, அசையாமல் இருந்ததால் தப்பினேன்,'' என்றார். மளுக்கப்பாறை வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் இருந்து மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில், யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வாகனத்தில் பயணிப்போர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும்' என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக.             

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments