இஸ்லாமியரின் புத்தாண்டு..!!

    -MMH 

ஹிஜ்ரி 1443 இன்று முடிந்து , இன்ஷா அல்லாஹ் நாளை 31/7/2022 ஹிஜ்ரி 1444 இஸ்லாமிய புத்தாண்டு பிறக்கிறது.வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஈமானோடு வாழ்ந்து எல்லா வளங்களும் நலங்களும் பெற்று இனிதாக வாழ நற் கிருபை செய்வானாக!

இஸ்லாமிய புத்தாண்டை வரவேற்போம்:

புலர்க புலர்க புத்தாண்டே!

புவியில் புலர்க புத்தாண்டே!

மலர்க மலர்க புத்தாண்டே!

மன்பதை மலர்க புத்தாண்டே!

வளர்க வளர்க புத்தாண்டே!

வாகாய் வளர்க புத்தாண்டே!

மிளிர்க மிளிர்க புத்தாண்டே!

மகிழ்வாய் மிளிர்க புத்தாண்டே!.

அன்பும் அறமும் ஓங்கிடவே

அழகாய் வருக புத்தாண்டே!

பண்பும் பணிவும் பெருகிடவே பகலாய் வருக புத்தாண்டே!

பசியும் பிணியும் போக்கிடவே

பவிசாய் வருக புத்தாண்டே!

வசியும் வளனும் சுரந்திடவே 

வாகாய் வருக புத்தாண்டே!

இரவும் பகலாய் இலங்கிடவே

இனிதாய் வருக புத்தாண்டே!

உறவும் உவப்பாய் விளங்கிடவே

உடனே வருக புத்தாண்டே!

ஏழை எளியோர் சிறந்திடவே 

இதமாய் வருக புத்தாண்டே!

கோழை மாந்தர் குறைந்திடவே குவலயம் வருக புத்தாண்டே!

என்றும் மக்கள் தொழுதிடவே இனிதாக வருக புத்தாண்டே!

வென்றும் வாழ்வில் உயர்ந்திடவே வேண்டும் வருக புத்தாண்டே!

மறையை மாண்பாய் ஓதிடவே மகிழ்வாய் வருக புத்தாண்டே!

குறையை வாழ்வில் ஓட்டிடவே குன்றாய் வருக புத்தாண்டே!

மாசுகள் வாழ்வில் களைந்திடவே மகிழ்வாய் வருக புத்தாண்டே!

வீசும் தென்றல் காற்றெனவே விரைவில் வருக புத்தாண்டே!

குற்றம் யாவும் குறைந்திடவே குவலயம் வருக புத்தாண்டே!

முற்றும் வாழ்வு நிறைந்திடவே முன்னதாக வருக புத்தாண்டே!

ஈகை மனம் பெருகிடவே இனிமையாய் வருக புத்தாண்டே!

வாகை என்றும் சூடிடவே வளமாய் வருக புத்தாண்டே!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-பாஷா.

Comments