கொங்கராயகுறிச்சியில் பழங்கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!!

     -MMH 

       கொங்கராயகுறிச்சியில் பழங்கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அகழாய்வு பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. 

       தாமிரபரணி ஆற்றின் தென்பகுதியில் ஆதிச்சநல்லூரும், வடபகுதியில் கொங்கராயகுறிச்சியும் அமைந்துள்ளது. கொங்கராயகுறிச்சியில் பழமைவாய்ந்த வலம்புரி விநாயகர் கோவில், வீரபாண்டீசுவரர் கோவில் உள்ளன. பாண்டிய மன்னர் ஆட்சியில். வலம்புரி விநாயகர் கோவில் நுழைவாயில் பகுதியில் பழங்கால 2 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில், ஒரு கல்வெட்டு 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும், மற்றொரு கல்வெட்டு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும், அவை வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்தது. 9-ம் நூற்றாண்டில் மாறன் சடையன் பாண்டிய மன்னரின் ஆட்சிக்காலத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. 11-ம் நூற்றாண்டு கல்வெட்டில் ராஜராஜ சோழனின் காந்தளூர் சாலை போர் வெற்றியை குறிப்பிடும் வகையில் பொறிக்கப்பட்டு உள்ளது. எனவே பழங்கால தமிழர்களின் வாழ்விடங்களை கண்டறியும் வகையில், கொங்கராயகுறிச்சியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும், என்று தொல்லியல் துறை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அன்சாரி, நெல்லை.

Comments