தூத்துக்குடி துறைமுக கடல் பகுதியில் ஆடி அமாவாசை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்க்கு தற்பணம் செய்தனர்!!

 

    -MMH 

    தூத்துக்குடி துறைமுக கடல் பகுதியில் ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் முன்னோர்க்கு தற்பணம் செய்தனர்.

ஆடி அமாவாசை தினத்தன்று தங்கள் முன்னோர்களுக்கு தற்பணம் செய்து வழிபட்டால் அது 12 ஆண்டுகள் பிதூர் திருப்தி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே தூத்துக்குடி துறைமுக கடற்கரை, திரேஸ்புரம், உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஏராளமானோர் குவிந்ததுடன் அவர்கள் கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தற்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-வேல்முருகன்,.தூத்துக்குடி.

Comments