தொடர் மழையால் அழுகிய தக்காளிகள் விவசாயிகள் வேதனை!!

 

    -MMH 

    கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சாகுபடி முக்கிய விவசாயமாக உள்ளது. இங்கு விளையும் தக்காளிகளை விவசாயிகள் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தக்காளி சீசன்  தொடங்கியதால் தக்காளி விலை சரிந்தது. ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது கிணத்துக்கிடவு பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செடிகளில் விளைந்துள்ள தக்காளிகள் அழுகி வருகிறது. விவசாயிகள் தோட்டங்களில் இருந்து பறித்து வரும் தக்காளிகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும்போது அழுகிய தக்காளிகளை குப்பையில் கொட்டி செல்கின்றனர்.

கிணத்துக்கடவு பகுதியில் விளையும் தக்காளிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் தக்காளிகள் அழுகி வருகிறது. இதனால் எங்களுக்கு  பெரும்  நஷ்டம் ஏற்பட்டு, தவிப்பில் இருந்து வருகிறோம். என்று விவசாயிகள் தங்கள் வேதனையை தெரிவித்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments