கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை!!

   -MMH 

     கோவை: சி.பி.எஸ்.இ., பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து  சாதனை.

தமிழகம் முழுவதும் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயமுத்தூர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் பயின்ற மாணவ,மாணவிகள் சி.பி.எஸ்.இ.,பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். அதன் படி பனிரெண்டாம் வகுப்பில் நேகா பாபு ராஜ்குமார் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்களும், மேலும் நான்கு மாணவர்கள் 490 கற்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.  பணிரெண்டாம் வகுப்பில் லட்சுமி பிரியா 492 மதிப்பெண்களும்  பெற்றுள்ளார். மேலும் பத்தாம் வகுப்பு தேர்வில் கனிகாஸ்ரீ 496 மதிப்பெண்கள்,பாவணாஸ்ரீ 495, சுபாஷிணி 494, பூமிநாதன் 493 மேலும் 490 க்கு மேல் 25 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.  

தமிழக அளவில் சாதனை புரிந்த மாணவ,மாணவிகளுக்கும் பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. கல்வி இயக்குனர்கள் சுஷ்மா மற்றும் சீமா,பள்ளியின் மேலாளர் நாகேந்திர ராவ்,பள்ளியின் தமிழக தலைமை மேலாளர் ஹரிபாபு,ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சாதனை மாணவிகள் மற்றும் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர். இது குறித்து பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் மாணவிகள் கூறுகையில்,"இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் நிர்வாகமும் ஆசிரியர்களும் இணைந்து பணியாற்றிய கூட்டு முயற்சியே." என்றனர். ஸ்ரீ சைதன்யா அனைத்து போட்டித் தேர்வுகளிலும் முன்னணி வகிப்பதாகவும் குறிப்பாக ஐஐடி, ஜே இ இ மற்றும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளிலும் சிறந்து விளங்குகிறது. தற்போது ஸ்ரீ சைதன்யா சி பி எஸ் சி வரிசையில் மேலும் விரிவடைந்து அனைவரும் கவனிக்கத்தக்க வகையில் உயர்ந்து வருவதாக தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

- சீனி,போத்தனூர்.

Comments