கொரோனாவிற்கு அடுத்தபடியாக விஸ்வரூபமெடுக்கும் குரங்கு அம்மை நோய் - பயத்தின் உச்சத்தில் மக்கள்!

   -MMH 

     உலகத்தில் உள்ள சில நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்நோய் பரவி வரும் நாடுகளில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்:

கடந்த சில வாரமாக கொரோனாவின் தாண்டவத்தை தடுக்க முடியாமல் உலக நாடுகள் அவதிப்படும் நிலையில் புதிதாக குரங்கு அம்மை நோய் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த நோய் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. ஐரோப்பிய நாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்த நபருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.மேலும் அண்மையில் துபாயில் இருந்து வந்த ஒரு நபருக்கு விமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில் குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருப்பதை அறிந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனாவிற்கு அடுத்தபடியாக விஸ்வரூபமெடுக்கும் குரங்கு அம்மை நோய் - பயத்தின் உச்சத்தில் மக்கள்! கொரோனாவிற்கு அடுத்தபடியாக விஸ்வரூபமெடுக்கும் குரங்கு அம்மை நோய் – பயத்தின் உச்சத்தில் மக்கள்.

மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமையில் வைத்து பரிசோதனை மேற்கொள்கிறார்கள். இதுமட்டுமின்றி தமிழகம் மற்றும் கர்நாடக போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்து அனுப்புவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக அளவில் குரங்கு அம்மை நோயின் பாதிப்பு 14 ஆயிரத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவிற்கு அடுத்தபடியாக விஸ்வரூபமெடுக்கும் குரங்கு அம்மை நோய் - பயத்தின் உச்சத்தில் மக்கள்!

-சிவகுமார் சிந்தாதிரிப்பேட்டை.

Comments