கட்டுமான பொருட்களை தேர்வு செய்ய வாருங்கள்!!

 -MMH 

வருடம் தோறும் திருப்பூர் பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக டிசம்பர் 30 31 ஜனவரி 1 ஆகிய தினங்களில் கார்த்திக் வித்யா கல்யாண மண்டபத்தில் பிரம்மாண்டமான கட்டிட கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வருடத்தின் கண்காட்சியை மிக விமர்சையாக நடத்த கட்டிட பொறியாளர்களின் சங்கத்தின் சார்பாக அதுக்கு உண்டான முயற்சியை வேலைபாடுகளை செய்து வருகின்றனர் செண்டை மேளம் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் இதில் பங்கேற்கும்.

இது மக்களுக்கு மிகவும் எளிமையான வழியாக அமையும் ஒரே இடத்தில் கட்டிடத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருள்களும் மூலப் பொருள்களும் பார்க்க முடியும் அதைப்பற்றி கேட்டறிந்து கொள்ளலாம் மேலும் நம் கட்டிடத்தை எப்படி அமைப்பது என்ற பல தரப்பட்ட யோசனைகள் நமக்கு வழங்க ஆலோசகர்கள் அங்கு இருக்கின்றனர் மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த கண்காட்சியில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் அமையும்.

 கண்காட்சியை காண திருப்பூர் மாவட்ட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். மேலும் ஸ்டால் புக்கிங் மற்றும் விளம்பரங்கள் வரும் நாட்களில் இருந்து புக்கிங் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது புக்கிங் செய்ய விருப்பமுள்ளவர்கள் அறிவுள்ள பொறியாளர்கள் அல்லது கார்த்திக் இந்திய கல்யாண மண்டபத்தில் அணுகவும்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா.

Comments