பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது ...!!

   -MMH 
    பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது .

பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இலவச நோட்டு புத்தகங்கள் பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுவதை தொடர்ந்து ,நேதாஜி ரோட்டில் உள்ள பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் தலைமை தாங்கினார். பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழக்கறிஞர் கவிஞர்.முத்துக்குமார் வழங்கினார்.
கவிஞர் சோழ நிலா அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் பேரவை நிர்வாகிகள் பேரவை செயலாளர் மணிகண்டன். ஹரி கிருஷ்ணா முத்தமிழ். விக்னேஷ் உள்ளிட்ட பலரும் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டார்.
முடிவில் நேதாஜி பேரவை விக்னேஷ் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments