தூத்துக்குடியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை! இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்!!

     -MMH 

     தூத்துக்குடியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான  இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். 

இஸ்லாமிய மக்களின் முக்கிய திருநாளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று (ஜூலை 10) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள ஈத்கா திடலில் பக்ரீத் பண்டிகை  சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான  இஸ்லாமியர்கள்  கலந்து கொண்டனர். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், கோவில்பட்டி, செய்துங்கநல்லூர், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசலில் காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-வேல்முருகன்,தூத்துக்குடி.

Comments