மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது!!

    -MMH 
    கோவை: மழையினால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு  கோவை சி எஸ் ஐ திருமண்டலம் சார்பில் வெள்ள நிவாரண பொருட்களை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது.

நீலகிரியில், கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய  பகுதிகளில்  விடிய விடிய மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆதிவாசி கிராமங்கள் உள்பட ஏராளமான பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவை சி எஸ் ஐ திருமண்டலம்   சார்பில் அத்தியாவசிய பொருட்களான உடைகள் முதல் உணவு பொருட்கள்கள் வரை தயார் செய்யப்பட்டது.

இதனையடுத்து கோவை சி எஸ் ஐ திருமண்டல  பேராயர் தீமோத்தி ரவீந்தர், திருமண்டல  செயலாளர்  ஆயர் பிரின்ஸ் கால்வின்,பொருளாளர் அமிர்தம்,ஒருங்கிணைப்பாளர் குழு ராபி மனோகர்,சமூக விழிப்புணர்வு  ஒருங்கிணைப்பாளர்  ஆயர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் அறிவழகன் உள்ளிட்ட நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டு நீலகிரி மாவட்ட மக்கள் நலம் பெற வேண்டுமென பிராத்தனை  செய்து நிவாரண பொருட்களை வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

- சீனி,போத்தனூர்.

Comments