தெருநாய்கள் கடித்து பொதுமக்கள் காயம்! நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகம்!!

 

-MMH

கோவையில் தெரு நாய்கள் கடித்து காயமடைந்த, 12 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி, 84வது வார்டுக்கு உட்பட்ட கரும்புக்கடை, ஜி.எம்.நகர் பகுதியில் தெரு நாய்கள் அதிகம் உள்ளன. நேற்றிரவு அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை தெரு நாய்கள் துரத்தி, பயந்து ஓடியவர்களை கடித்து குதறியது. இதில், ஒரு முதியவர், 11 குழந்தைகள் காயமடைந்தனர். அவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவல் அறிந்ததும், கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கவுன்சிலர் அலிமா உள்ளிட்டோர் அரசு மருத்துவமனை சென்று காயமடைந்த குழந்தைகளிடம் நலம் விசாரித்தனர். உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, சுற்றித்திரிந்த தெரு நாய்கள் வலைவீசி பிடித்து செல்லப்பட்டன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments