ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி!!

   -MMH 

கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ். மேட்டுப்பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55) கூலித்தொழிலாளி. முருகன் தன் நண்பர் சொக்கலிங்கம் என்பவருடன் கோவில்பாளையம், சேரன் நகர் பகுதியிலுள்ள ஆற்றில் மீன்பிடிக்க சென்றார்.

முருகன் மீன் வலையை தண்ணீரில் வீசி சிறிது நேரம் கழித்து மீன் வலையை எடுப்பதற்காக தண்ணீருக்குள் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற முருகன் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்.

அதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் சொக்கலிங்கம் தண்ணீரில் மூழ்கிய முருகனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முருகனின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments