கோவை மஜக கிளை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்!!

   -MMH 

மனிதநேய ஜனநாயக கட்சி யின் சார்பில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு  பேதமின்றி முன் விடுதலை செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 10 அன்று சென்னையில் தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. அதன் முதற்கட்ட பணிகள் தொடர்பாக மஜக கோவை மாநகர் மாவட்ட மத்திய பகுதிக்குட்பட்ட வார்டு எண் 77,78,79.கிளை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பகுதி பொறுப்பாளர் இப்ராஹிம், தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ஹனீபா, ஜாபர்சாதிக், ஆகியோர் பங்கேற்று போராட்டத்தின் அவசியம் குறித்தும், இப்போராட்டத்தில் அதிகப்படியான மக்கள் கலந்து கொள்வது குறித்தும், முதற்கட்ட பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

இக்கூட்டத்தில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அன்சர், அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தங்களை மஜக வில் இணைத்துக்கொண்டனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹக்கீம்,  77வார்டு செயலாளர் பீர்முகாம்மது, துணை செயலாளர் கமால்பாஷா, 78வார்டு செயலாளர் யூசுப், துணை செயலாளர் சம்சுதீன், 79வார்டு துணை செயலாளர் ரியாஸ், அப்பாஸ், செளகத், ஜாகிர், முஸ்தாக், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-முஜீப்ரஹ்மான், செல்வபுரம்.

Comments