தேங்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை!!

   -MMH 

    கோவை மாவட்டத்தில், தென்னை சாகுபடி பரப்பு அதிகமுள்ளது. அதேபோல் பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து வடமாநிலத்துக்கு வெளிமாநிலங்களுக்கு தேங்காய், தேங்காய் எண்ணெய், கொப்பரை வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மழை கைகொடுத்ததால் தென்னை சாகுபடியில் தேங்காய், கொப்பரை உற்பத்தி அதிகரித்துள்ளது. தேங்காய், கொப்பரை பலமடங்கு வரத்து அதிகரித்துள்ளதால் விலைச்சரிவு ஏற்பட்டுள்ளது.

 இந்தாண்டு தொடர் விலை சரிவால் கடந்தாண்டு ஒரு தேங்காய் 20 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது ஒன்பது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கொப்பரை ஒரு கிலோ சாதா- 102, ஸ்பெஷல்- 106 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போதுவெளி மார்க்கெட்டில் கொப்பரை கிலோவுக்கு 79 - 80 ரூபாய்க்கு சாதாவும், ஸ்பெஷல், 82 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு டின் (15 கிலோ)தேங்காய் எண்ணெய் 2,650 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது 1,790 ரூபாய்க்கு விற்கிறது. கருப்பு தேங்காய் ஒரு டன் 31,500, பச்சை தேங்காய் டன் 28,500 ரூபாய்க்கும் விற்றது. தற்போது கருப்பு தேங்காய் 24 ஆயிரம், பச்சை தேங்காய் 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கிறது.தேங்காய் பவுடர் கிலோ 180 ரூபாய்க்கு விற்றது; தற்போது 125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

அனைத்து விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் வெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments