கோவை அரசு மருத்துவமனையில் தற்காலிக பணி வாய்ப்பு!!

   -MMH 

கோவை அரசு மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்ட, 18 பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தற்காலி க பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கோவை மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்டுள்ள, காலி பணியிடங்கள்: பன்முக பணியாளர்- 2, மருத்துவ உதவியாளர்- 4, பன்முக சுகாதாரப்பணியாளர்கள்- 8, அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர்- 2, கதிரியக்கவியல் துறை நிபுணர்- 2 என 18 பேர் நியமிக்கப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றிதழ்களுடன் முதல்வர் கோவை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, கோவை-18 என்ற முகவரிக்கு, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி மாலை 5:45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ அனுப்ப வேண்டும் என கலெக்டர் சமீரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments