சொத்து வரி மின் கட்டண உயர்வை கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

    -MMH 

தமிழக அரசு பிறப்பித்துள்ள சொத்துவரி மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுந்தன மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, மக்கள் விரோத ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி  வேலுமணி குற்றம்சாட்டினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன்,கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி,சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி,கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர்  கலந்து கொண்டனர்.

திருவள்ளுவர் திடலில் அதிமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பொழுது அவ்வழியில் போக்குவரத்து முடங்கியது போக்குவரத்தை சரி செய்ய காவல்துறையினர் நின்று வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பிவைத்தனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments