கோவை கிழக்கு மண்டலத்தில் தலை விரித்து ஆடும் தண்ணீர் பஞ்சம்!!

     -MMH 

கோவை கிழக்கு பகுதியில் சேரன் மாநகர் காலப்பட்டி விளாங்குறிச்சி ஆகிய இடங்களில் வாழ்வின் முக்கிய பங்கு வைக்கும் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. 10, 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் ஆகின்றன என்று மக்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இதன் பற்றி மக்கள் கூறுகையில் சேரன் மாநகர் பகுதியில் தினந்தோறும் தண்ணீர் தர வேண்டும் என்பதே சேரன் மாநகர் உருவான காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது ஆனால் தற்பொழுது சேரன்மனார் பகுதி சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் விரிவாக்கம் ஆகிவிட்டதால் சேரன் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீரை மாமன்ற உறுப்பினர்கள் இருந்து எம்எல்ஏ வரை அனைவரும் குடிநீரை இதரப் பகுதிகளுக்கு விநியோகம் செய்வதால் சேரன் மாநகர் மக்களுக்கு குடிநீர் வினியோகம் மாதத்தில் பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது என்று பகுதியில் உள்ள மக்கள்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இது கடந்த பத்து வருடங்களாகவே குடிநீர் பிரச்சினை அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆகையால் மாநகராட்சி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சேரன் மாநகருக்கு கிடைக்க வேண்டிய குடிநீரை சேரமான் நகர் பகுதிக்கு மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே சேரன் மாநகர் பகுதி பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா.

Comments