தூத்துக்குடியில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம்!! - கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்!!

    -MMH 

     தூத்துக்குடியில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் காசநோய் இல்லா தமிழ்நாடு 2025 என்ற திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய நவீன வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனமானது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நகர்புற குடிசைப்பகுதிகள், தொழிற்சாலை பகுதிகள், காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் வாழ்பவர்கள் மற்றும் எச்.ஐ.வி. பாதிப்பிற்குள்ளானவர்கள், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நவீன வாகனத்தின் மூலமாக ஒருமணி நேரத்தில் 10 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க முடியும், எக்ஸ்ரே குறித்த தகவல்களை பொதுமக்கள் இந்த வாகனத்திலுள்ள தொலைக்காட்சி மூலமாக நேரில் பார்த்தும் அறிந்திடலாம். தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்திய நடமாடும் வாகனம் சேவையை கனிமொழி எம்.பி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-வேல்முருகன்,.தூத்துக்குடி.

Comments