தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்!

 -MMH 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

முழு ஊரடங்கு:

இந்தியாவில் கொரோனாவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் பல நாடுகளும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மாவட்டத்தில் கொரோனா வேகம் எடுத்து காணப்படுகிறது. மேலும் தினசரி கொரோனா தொற்றில் 1000 பேருக்கு மேல் சென்னையில் பாதிப்படைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முழு ஊரடங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று மக்கள் பயத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தாவது, ‘கொரோனாவின் தாக்கம் அதிகமாக பரவுவதால் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறோம். மேலும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்புகள் குறைவு, கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பின் முதல்வருடன் ஆலோசித்து உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அது வரை அதிகமாக பரவும் இடங்களில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-சிவக்குமார், சிந்தாதிரிப்பேட்டை.

Comments