அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி திட்டம் ரூ.1000 உதவித்தொகை அறிவிப்பு!!

 

    -MMH 

     திருமணத்திற்காக பெண்களுக்கு கொடுக்கப்படும் உதவித்தொகைகள் உறுதி திட்டமாக கடந்த மார்ச் 2022 அன்று நிறைவேற்றப்பட்டது. இதனால் அரசாங்க பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாத மாதம் ரூபாய் 1000 வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் முதல் கட்டமாக 2½ லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ₨1,000 நிதியுதவி அளிக்கும் திட்டம் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஹரி சங்கர், கோவை வடக்கு.

Comments