வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது!!

      -MMH 

தூத்துக்குடி முத்தையாபுரத்தை அருகேயுள்ள முள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் அலெக்ஸ் (28). உப்பள தொழிலாளி. இவர் நேற்று முத்தையாபுரம் தேவி நகரை சேர்ந்த தனது நண்பரான மகேஷ் வீட்டில் வைத்து நண்பர்களுடன் மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் மகேஷ் மற்றும் அவரது நண்பர் ஆறுமுகச்சாமி ஆகியோர் அலெக்சை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகேஷ், ஆறுமுகச்சாமியை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மகேசின் சகோதரரான ரமேஷ் என்பவரை கடந்த ஆண்டு அலெக்ஸ் கத்தியால் குத்தியதாக கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்த முன்விரோதத்தில் மகேஷ் எப்படியாவது அலெக்சை தீர்த்து கட்டிவிட வேண்டும் என்று திட்டம் தீட்டியதும், அதன்படி நேற்று தனது வீட்டுக்கு மது குடிக்க அழைத்து வந்ததும் தெரியவந்தது. அங்கு அலெக்சை அதிக அளவு மதுகுடிக்க வைத்து பின்னர் வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-முத்தரசு கோபி, தூத்துக்குடி.

Comments