மாற்றுத்திறனாளிகளின் பன்முக திறமைகளை ஊக்குவிக்க கோவையில் எபிலிட்டி 2022 விழா!!

      -MMH 

மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழகத்தில் அரசு மற்றும்  தன்னார்வ அமைப்பினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நித்திலயம் அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகளின் பன்முக திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக மாநில அளவிலான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் போட்டி கோவை எஸ்.என்.ஆர். அரங்கில் நடைபெற்றது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாநில அளவில் நடைபெற்ற இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என தமிழகம் முழுவதும் இருந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டனர்.நித்திலயம் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி ஆகியோர் இணைந்து நடத்திய இதில் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் காயத்ரி சம்பத் மற்றும் சம்பத் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் கௌரவ அழைப்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, பின்னணி பாடகர்கள் வினோத் வேணுகோபால் ரேஷ்மி ஆகியோ கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் கேலக்ஸி நிர்வாகிகள் ரகு கண்ணப்பன் குணசேகரன் சுதீர் நித்திலம் டிரஸ்ட் நிர்வாகிகள் ராஜேந்திரன் காளிச்சாமி, கருணாநிதி தீபா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments