கத்திமுனையில் வழிப்பறி செய்த 2 பேர் கைது!!

        -MMH 

கோவை புலியகுளம் அருகே நகை பட்டறை ஊழியரிடம் வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 51). நகை பட்டறை ஊழியர். இவர் ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது  வந்த 2 வாலிபர்கள் ஜெயராஜை வழிமறித்து பணம் தருமாறு  கத்தியை காட்டி மிரட்டி  ஜெயராஜ் அவரிடம் இருந்து ரூ.500 பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஜெயராஜ் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். 

இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த பைஜு (28), மதுரை வீரன் திட்டைச் சேர்ந்த மதன்குமார் (24) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது போன்ற வழிப்பறிச்  சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments