ஆசிரியர் கல்லூரி மாணவிகள் உட்பட 2 பெண்கள் மாயம்! காவல்துறை விசாரணை!!

தூத்துக்குடியில் ஆசிரியர் கல்லுரி பயிற்சி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகில் உள்ள  கொல்லம்பறம்பு  கிராமத்தை சேர்ந்தவர் உடையார். இவரது மகள்  கீதாமாரி (20), ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி கல்லூரிக்கு சென்றார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய எந்த தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கற்பகம் தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதே போல்,

தூத்துக்குடி அருகேயுள்ள செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிலிங்கம், இவரது மகள் மகாலட்சுமி (21). இவரை கடந்த 22ம் தேதி முதல் காணவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. 

இது குறித்து அவரது தந்தை ஆதிலிங்கம் தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேற்கண்ட இரு புகார்கள் குறித்தும் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments