நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அக்காள்-தங்கைகள் 3 பேரை மணந்த பிரான்ஸ் வாலிபர்கள்!!

     -MMH 

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாக கொண்ட மாசிலாமணி-ஆனந்தி தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்கள். அங்கு மாசிலாமணி, தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயணி என 3 மகள்கள் உள்ளனர். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

3 பேரும் பிரான்சில் படித்து, அங்கேயே பணியாற்றி வருகின்றனர். மூவரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபர்களை காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மாசிலாமணி குடும்பத்தினர், தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று மாசிலாமணி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தனது உறவினர்களுடன் வந்தார். தங்களின் 3 மகள்களுக்கும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜார்ஜ், ராம்குமார், மஜ்ஜூ ஆகிய மூவருக்கும் திருச்செந்தூர் கோவிலில் வைத்து தமிழ் கலாசார முறைப்படி மாலை மாற்றி திருமணம் நடத்தினார். மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments