தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல்!!

     -MMH 

தூத்துக்குடி தருவைகுளம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார்  குளத்தூர்  அருகே உள்ள தெற்கு கல்மேடு கடற்கரை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது கடற்கரையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை சோதனையிட்டனர். லாரியில் இருந்த சுமார் 2000 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதைத் தொடர்ந்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து லாரி டிரைவரான சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த இருளப்பன் மகன் கருப்பசாமி (32), கிளீனர் பரமசிவன் மகன் மணிமாறன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கடற்கரையில் நின்ற படகில் இருந்து தப்பியோடிய 4பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த பீடி இலைகள் சிவகாசியில் இருந்து கொண்டுவரப்பட்டு, இலங்கைக்கு கடத்த முயன்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments