கோவில்பட்டி தொகுதியில் நலத்திட்ட பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது!! ரூ.60.69 லட்சம் ஒதுக்கீடுகள்.

 

   -MMH 

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம். எல். ஏ. , தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனையில் ரூ. 30 லட்சம் செலவில் சிமெண்டு சாலை, இனாம் மணியாச்சி பஞ்சாயத்து மீனாட்சி நகர் 6-வது தெருவில் வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ 7. 69 லட்சமும், கோவில்பட்டி மெயின் ரோடு சாந்தி மெடிக்கல் அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ. 9 லட்சமும், ஜோதிநகர் ஓ. எஸ். வேல்சாமி தெருவில் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்க ரூ. 14 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். 

இந்த பணிகளுக்கு  பூமி பூஜை நடந்தது. இதில் அவர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமல வாசன், நிலய மருத்துவர் பூவேஸ்வரி, பொதுப்பணி துறை உதவி பொறியாளர் கோமதி, பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சுப்புலட்சுமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆர். சத்யா, பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, அ. தி. மு. க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரைப் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக  

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

Comments