75வது சுதந்திரதின நல்வாழ்த்து!!! ஓங்குக... இந்தியர் ஒற்றுமை என்று உயர்த்தொலிப்போம்!

  -MMH 

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று ஆடிப்பாடி, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்து கொண்டாட வேண்டிய நன்னாள் இன்று. உங்கள் அத்துனை பேருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்தைப் பெருமையுடன் கூறிக் கொள்கிறோம்.

முப்பது கோடியாக இருந்தபோது பெற்ற சுதந்திரம், இன்று 75 ஆண்டுகளில் 140 கோடியாக பல்கிப் பெருகி உலகில் அதிக மக்கள்த்தொகை கொண்ட இரண்டாவது நாடு என்ற பெருமை போதுமா?

இந்தியர்கள் என்றால் சாதிகளால் மதங்களால் பிளவு பட்டவர்கள்; லஞ்ச லாவண்யங்களில் ஊறிப் போனவர்கள்; காட்டிக் கொடுக்கும் 'எட்டப்பன்கள்' நிறைந்தவர்கள்; ஏழைகள்,  சோம்பேறிகள், முட்டாள்கள்  என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்ட அடிமை அடையாளங்களை தகர்த்தெரிவோம்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

"கல்வி, உழைப்பு, உற்பத்தி, தொழில் என்றிவற்றில் தன்னிறைவு பெற்றவர்களாக, அன்பும் ஆன்மீகமும் படர்ந்த பண்பாடு மிக்கவர்களாக, உலகம் வியக்கும் ஒற்றுமை வளர்ப்பவர்களாக விளங்குவோம். உழவையும் உழவர்களையும் உயிரே போல் போற்றுவோம். 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மண் வளம், நிலத்தடி நீர்வளம் பெருக்கி இயற்கையைக் கண்ணெனக் காப்போம்" என்ற உறுதியோடு,  தாய்த்திரு நாட்டின் விடுதலைக்காக தங்கள் நல்லுயிர் ஈந்த தியாகத் திருமக்களுக்கு நன்றியும் அஞ்சலியும் செலுத்தி, சுதந்திரக் காற்றே! உனை சுவாசித்தே செழித்திருக்கிறோம், மகிழ்ந்திருக்கிறோம் என்ற நிறைவோடு, மீண்டும் அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்தைப் பெருமையுடன்  உரித்தாக்குகிறோம் உறவுகளே!

இந்தியர் என்ற பெருமையுடன்,

Ln. இந்திராதேவி முருகேசன் / சோலை. ஜெய்க்குமார்.

Comments