கோவையில் 75 அடி உயர தேசியக்கொடி!!

  -MMH 

75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி கோவையில் 75 அடி உயர தேசியக்கொடி ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது. 

நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி கோவை மாநகரம் முழுவதும் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில்  பல்வேறு  நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

இதனை ஒட்டி சுதந்திர தினத்தை போற்றும் வகையில் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் 75 அடி உயர தேசியக்கொடி ஏந்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அப்போது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் முழக்கங்கள் எழுப்பினர். இந்த நிகழ்வில் 84 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலிமா ராஜா தலைமை வகித்தார் மேலும் 

 மண்டலத் தலைவர் ராஜா உசைன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தபா, வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம், தொழிற் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவூப்நிஸ்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பவுரூதீன்,சுல்தான்,மீடியா மன்சூர்.

தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி தலைவர் உம்மர் செரீப் தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி செயலாளர் சபீர்,விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் காமிலா, மாவட்ட செயலாளர் சாஜிதா, மாவட்ட இணைச்செயலாளர்  பரீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- சீனி, போத்தனூர்.


Comments