75 வது ஆண்டு சுதந்திர தினத்தை நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது!!

      -MMH 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மண்டல தலைவர் A.அன்வர் உசேன் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றினார்.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் A.S.இஸ்மாயில் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ 

அவர் பேசுகையில்:

"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, சுதந்திரத்திற்காக போராடியவர்களையும், உயிர்த்தியாகம் செய்தவர்களையும் இந்நன்னாளில் நினைவு கூறுவோம்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மேலும் அன்று இந்தியர்கள் சுதந்திர காற்றை சுவாசித்து விடக்கூடாது என்பதற்காக   ஆங்கிலேயன் பல்வேறு அநியாங்களை  கட்டவிழ்த்து விட்டான். பெற்ற சுதந்திரத்தை இல்லாமல் ஆக்க இன்று சங்பரிவாரக்கூட்டங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றது. உடைமைகள்  உயிர்களை இழக்கும் சூழல் வந்தாலும் அனைத்து விதமான அர்ப்பணிப்புகளுக்கும் தயாராகி பெற்ற  சுதந்திரத்தை பேணி  பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். அனைவரும் ஓரணியில் ஒற்றுமையாக  செயல்பட்டு வெற்றி பெறுவோம்" என்று கூறினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொருளாளர் T.M.இப்ராஹிம் பாதுஷா,  SDPI கட்சியின் கோவை மாவட்ட தலைவர் A.முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃப்ரண்ட்டின் கோவை மாவட்ட செயலாளர் N.உபைதுர் ரஹ்மான் சுதந்திர தின உறுதிமொழியை முன்மொழிய பொதுமக்கள் அனைவரும் சுதந்திரத்தை பேணிப்பாதுகாக்க உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

- சீனி, போத்தனூர்.

Comments