உல்லாசமாக இருக்க சகோதரி வீட்டில் 80 பவுன் கொள்ளை!!

    -MMH 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சல்லிசெட்டிபட்டி கிராமத்தினை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் சவுதி அரோபியாவில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் அழகு சுந்தரி. செல்லப்பாண்டி மனைவி ராதா மற்றும் குழந்தைகள் பால்பிரணவ், சஞ்சித் ஆகியோர் ஊரில் வசித்து வருகிறார். 

மேலும் தனது குழந்தைகளின் கல்வி வசதிக்காக ராதா விளாத்திகுளம் அம்பாள் நகரில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். அவருடன் அவரது அத்தை அழகு குண சுந்தரியும் தங்கியுள்ளார்.

அத்தையும், மருமகளும் வாரத்திற்கு ஒரு முறை சல்லிசெட்டிபட்டிக்கு வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. கடந்த 30ந்தேதி மதுரைக்கு சென்று விட்டு இரவு சல்லிசெட்டிபட்டியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த பீரோவினை திறந்து பார்த்த போது அதில் இருந்த 80 பவுன் தங்க நகை மற்றும் 4 லச்சம் பணம் காணமால் போனதாக தெரிகிறது. 

பீரோ உடைக்கப்படமால் நகை திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட எஸ்பி.தனிபிரிவு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவம் இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக அதே ஊரைச்சேர்ந்த மணிகண்டன் (26), வசந்த்குமார் (23) இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன், மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் மணிகண்டன் செல்லப்பாண்டியின் மனைவி ராதாவின் சித்தப்பா மகன். செல்லப்பாண்டியன் வீட்டிற்கு 2 சாவிகள் உண்டு, ஒரு சாவி செல்லபாண்டியன் தாய் அழகு சுந்தரி இடமும், மற்றொரு சாவி ராதாவிடம் இருந்துள்ளது. செல்லபாண்டியன் தாய்க்கு வயதாகி விட்டதால் சாவியை மணிகண்டன் வீட்டில் கொடுத்து வைத்துள்ளார். அவ்வப்போது ஊருக்கு வரும் போது சாவியை வாங்கி வீட்டிற்கு சென்றுவிட்டு செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. 

அந்த நகையை அதே ஊரைச் சேர்ந்த நண்பர் வசந்தக்குமாரிடம் கொடுத்துள்ளார். அருப்புக்கோட்டையில் ஒருவரிடம் வசந்த்குமார், மணிகண்டன் இருவரும் அடகு வைத்து 80 ஆயிரம் பணத்தினை பெற்று உல்லசமாக இருந்துள்ளனர். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திருடிய பின்னர் மதுரையில் தனியார் லாட்ஜில் அறை எடுத்து மணிகண்டன், வசந்தக்குமார், இவர்களின் நண்பர் தேனி வடுகபட்டியை சேர்ந்த பிரபாகரன் 3 பேரும் தங்கியுள்ளனர். அன்று 3 பேரும் மது அருந்தியுள்ளனர். மணிகண்டன், வசந்தக்குமார் இருவரும் மதுபோதையில் நல்ல அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த போது, 80 பவுன் நகை இருந்த பேக்கினை பிரபாகரன் தப்பியோடியதாக கூறப்படுகிறது. பிரபாகரன், தான் காதலித்த பெண் ஒருவருடன் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments