ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ரயில்வே கேட் முடக்கம்! ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை!!

     -MMH 

        திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் இரண்டு ரயில்வே கேட்கள் இருந்தன. ஏழு ஆண்டுகளுக்கு முன், முதல் ரயில்வே கேட் மூடப்பட்டது.அருகே சபாபதிபுரத்தில் சுரங்கபாலம் இருப்பதாலும், ஊத்துக்குளி ரோட்டுக்கு மிக அருகிலேயே ரயில்வே கேட் இருப்பதாலும், ரயில்வே கேட் மூடப்படுவதாக அப்போது ரயில்வே தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

ஊத்துக்குளி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், யூனியன் மில்ரோடு - கொங்கு மெயின் ரோட்டை இணைக்க, முதல் ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால், சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் பிடிவாதமாக கேட்டை திறக்க மறுத்து வந்தது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தற்போது வரை கேட் திறக்கப்படவில்லை. கேட் கீப்பர் அறை ஆண்டுக்கணக்கில் பூட்டியே கிடந்ததால், இரவில் பலர் உறங்குவதும், சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதும் வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷனில் துவங்கி இரண்டாவது ரயில்வே கேட் வரை இரண்டுகி.மீ., துாரத்துக்கு தடுப்புச்சுவர் அமைக்க ரயில்வே திட்டமிட்டு, பணிகளை நேற்று முன்தினம் துவங்கியது.

அதன் ஒரு பகுதியாக, நேற்று, முதல் ரயில்வே கேட்கீப்பர் அறை இடித்து அகற்றப்பட்டது.ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்த கேட்கீப்பர் அறை பொக்லைன் மூலம் ஐந்தே நிமிடத்தில் அகற்றப்பட்டது.அஸ்திவாரம் எடுத்து தடுப்புச்சுவர் கட்டப்பட்ட பின், கேட்டும் அகற்றப்பட உள்ளது. இதனால், இனி முதல் ரயில்வேகேட் திறக்க வாய்ப் பில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-திருப்பூர், பாஷா.

Comments