கோவை முல்லை தற்காப்பு கலை கழகத்தில் பயிற்சி பெறும் சகோதரிகள் சாதனை!!

      -MMH 

கோவை   சின்னவேடம்பட்டி மற்றும் சேரன் மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் 5 வயது முதலான அனைத்து  மாணவ மாணவிகளுக்கு சிலம்பம், அடி முறை, சுருள் வாள் என தமிழக பாரம்பரிய தற்காப்பு கலை கற்றுத்தரப்படுகிறது.

சிலம்பம் அடிமுறை, வேல்கம்பு மான்கொம்பு, சுருள் வாள், வாள் வீச்சு, வளரி போன்ற ஆயுதப் பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத்தரப்படுவதுடன், அவர்கள் இதே கலைகளில் உலக சாதனை புரியவும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.  

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் கோவை சேரன் மாநகர் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார், வித்யா ஆகியோரின் மகள்கள் ரித்திகா மற்றும் ரியா. சிறு வயது முதலே தமிழக பாரம்பரிய கலைகளை கற்பதில் ஆர்வமுள்ள சகோதரிகள் இருவரும் முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தில் முறையாக பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது இதில் உலக சாதனை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். 

கோவை விளாங்குறிச்சி வி.கே.ஆர்.மண்டபத்தில் நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில், பதினோரு வயதான ரித்திகா ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பம், சுருள் வாள், மான்கொம்பு மற்றும் வாள் வீச்சு என ஐந்து கலைகளை காலை ஐந்து மணி முதல் மாலை ஆறு மணி வரை தொடர்ந்து 13 மணி நேரம் சுற்றி இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதே போல இவரது இளைய சகோதரி ரியா ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை இரண்டு வழி முறைகளில் தொடர்ந்து ஏழு மணி நேரம் சுற்றி இவரும் இந்தியா புக் ஆப் வேர்ல்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை முல்லை தற்காப்பு கலை கழகத்தில் பயிற்சி பெற்று வரும் சகோதரிகள் இருவரும் ஒரே நேரத்தில் இரு வேறு சாதனைகளை செய்ததை அவர்களது பயிற்சியாளர் பிரகாஷ் ராஜ் மற்றும் பெற்றோர்கள் உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர். சாதனை சிறுமிகள் ரித்திகா மற்றும் ரியாவிற்கு இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments